logo
புதுக்கோட்டை மாவட்ட சிஐடியு சார்பில் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 26 மையங்களில் பிரசாரம்

புதுக்கோட்டை மாவட்ட சிஐடியு சார்பில் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 26 மையங்களில் பிரசாரம்

10/Jun/2021 05:55:17

புதுக்கோட்டை, ஜூன்: மோடி தலைiயிலான ஒன்றிய அரசு 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு  சார்பில் வியாழக்கிழமை  புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 மையங்களில் பிரசாரம் நடத்தப்பட்டது. 

கோரிக்கைகள்: தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் வசதியை இலவசமாக வழங்க வேண்டும், கார்ப்பரேட் சார்பு தடுப்பூசி கொள்கைகளை கைவிட வேண்டும். கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள போதுமான மருத்துவக் கட்டமைப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை சீர்குலைப்பது  மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

 சேவை நிறுவனங்களில் தனியார் முதலீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7,500 ரூபாய் மாதம்தோறும் வழங்க வேண்டும். உணவு தானியங்களை அடுத்த ஆறு மாதத்திற்கு இலசமாக வழங்க வேண்டும்.

முன் களப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 26 மையங்களில்  பிரசாரம்  நடைபெற்றது. 

புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரசாரத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின் னா தலைமை வகித்தார். கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளா ளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் ரெத்தினவேல், சாந்தார், சந்தானம் உள்ளி ட்டோர்  பேசினர்.

இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரணவனிடம் நிர்வாகிகள் மனு அளித் தனர். இதே போல அந்தந்த வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Top