logo
முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதியளிக்ககோரி சட்ட அமைச்சர் ரகுபதி, எம்எல்ஏ- முத்துராஜாவிடம் மனு

முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதியளிக்ககோரி சட்ட அமைச்சர் ரகுபதி, எம்எல்ஏ- முத்துராஜாவிடம் மனு

10/Jun/2021 04:23:24

புதுக்கோட்டை, ஜூன்: முடிதிருத்தும் நிலையங்களை  குறிப்பிட்ட நேரங்களில் திறக்க அனுமதியளிக்ககோரி  சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் புதுக்கோட்டை எம்எல்ஏ- முத்துராஜா ஆகியோரிடம்  மாவட்ட மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலர் எம்.பி. முத்து மற்றும்  சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து  மனு அளித்தனர்:

கோரிக்கை மனு விவரம்: ஊரங்கு காரணமாக  திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ள  முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சலூன் கடை களை காலை வேளையில் 5 மணி நேரம் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை  மிழக முதல்வர் மு..ஸ்டாலினுக்கு  பரிந்துரை செய்ய வேண்டும்.

ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் ஈட்டும் வருமானத்தை வைத்தே  குடும்பத்தைக் காப்பாற்றி வந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் நீண்ட காலமாகத் தொழில் செய்ய முடியாததால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு  நிவாரண  உதவி வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


இது தொடர்பாக மாவட்ட அமைப்புச்செயலாளர் எம்.பி.முத்து கூறியதாவது:

தமிழகத்தில் மார்ச் 25 -ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டாலும், சலூன் கடைகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் முடி திருத்தும் நிலையங்கள் உள்ளன. அதில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்த தொழிலை நம்பி உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடை வாடகை, மின்சார கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. கடந்தாண்டு, ஊரடங்கு விதிக்கப்பட்டபோது பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். இந்த நிலை தொடர்ந்தால், தொழிலாளர்களின் குடும்பங்கள் உணவுக்கும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுவிடும்.

முடி திருத்துவோர் நலவாரியத்தில் தமிழ்நாடு முழுவதும் 17,300 பேர் மட்டுமே பதிவு செய்துகொண்டுள்ளனர் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 2,000 ரூபாய் நிவாரணம்கூட அதில் சில ஆயிரம் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் கிடைத்திருக் கிறது. மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.

சலூன்  கடைகளால் மட்டும் நோய்த் தொற்று பரவும் என்று தமிழக அரசு நினைப்பது வேடிக்கையாக உள்ளதுஎங்களது குடும்பங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு என்ன விதமான நிபந்தனைகளை விதிப்பது என்பதை ஆலோசித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி முடி திருத்தும் நிலையங்களையும் திறப்பதற்குத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.  என முத்து தெரிவித்தார்.

Top