logo
ஈரோடு காரைக்காலில் காவிரி ஆரத்தி வைபவ விழா

ஈரோடு காரைக்காலில் காவிரி ஆரத்தி வைபவ விழா

18/Nov/2020 10:06:41

ஈரோடு : காசி போன்ற ஆன்மீக தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது அதுபோல காவிரி நதியின் சிறப்புகளை கூறும் வகையில் ஆற்றில் தண்ணீர் தொடர்ந்து செல்லும் வகையிலும் அதன் மூலம் விவசாயம் செழிக்கவும் இந்து ஆன்மீக எழுச்சி இயக்கம் சார்பில் காவிரி ஆரத்தி வைபவம் நடந்த வேண்டுகோள் விடுத்ததனர். 

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவிரிக்கரை பகுதியில் காவிரி ஆரத்தி வைபவ விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு சௌராஷ்டிரா சபை சார்பில் காவிரி நதி ஆரத்தி விழா நவ.18 காலை ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் உள்ள நாகர்கோவிலில்   நடந்தது இதையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

 அதைத்தொடர்ந்து, கோவில் அருகில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் புண்ணிய நதியாக கருதப்படும் காவிரியின் புகழ்பாடி சிறப்பு மந்திரங்கள் சொல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் டாக்டர் சரவணன் கலந்துகொண்டு காவிரியின் பெருமையைப் பற்றியும் நதிகள் பாதுகாப்பு பற்றியும் விளக்கி பேசினார். பக்தர்கள் பலர் கலந்து கொண்டு செல்லும் தண்ணீரை மலர் தூவி  வணங்கினார்கள்.


Top