logo
புதுக்கோட்டையில் கட்டிட உடைப்போர் சங்க நிர்வாகியின் வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய மர்ம நபர்கள்: போலீஸார் விசாரணை

புதுக்கோட்டையில் கட்டிட உடைப்போர் சங்க நிர்வாகியின் வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய மர்ம நபர்கள்: போலீஸார் விசாரணை

27/Apr/2021 01:57:08

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியைச் சேர்ந்த  கட்டிடங்களை உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும்  அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளரின்  நான்கு சக்கர வாகனம் மற்றும் ஜேசிபி ஆகியவற்றின் கண்ணாடிகளை மர்ம நபர்கள்  உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட கட்டிட உடைப்போர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தாரணி உதயகுமார் பழைய இரும்பு மற்றும் கதவுகள் ஓடுகள் விற்பனை கடை மச்சுவாடியில் வைத்துள்ளார் இவர் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு கடையின் அருகே இரண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் ஜேசிபி நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார் காலையில் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்த போது நான்கு சக்கர வாகனம் மற்றும் ஜெசிபி ஆகிய வாகனங்களின் கண்ணாடி உடைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில்  கணேஷ் நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து எதிரே உள்ள கடையின் சிசிடிவி கேமரா  பதிவை ஆய்வு செய்தனர். அதில்,   2 மர்ம நபர்கள் உருட்டுக் கட்டையோடு இரண்டு வாகனங்களை சேதப்படுத்தும்   காட்சி பதிவானது தெரியவந்தது. இதையடுத்து கணேஷ் நகர்  போலீஸார்  வழக்குப்பதிவு செய்து அந்த காமிராவில் சிக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.

இது குறித்து  கடையின் உரிமையாளர் தாரணி உதயகுமார்  கூறுகையில், தனது வாகனத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் எங்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து சாலை மறியலில் ஈடுபட போவதாகவும்  குறிப்பிட்டார்.

Top