logo
புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 92 - வது பிறந்த நாள் விழா

புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 92 - வது பிறந்த நாள் விழா

01/Oct/2020 11:34:33

புதுக்கோட்டை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  92 -ஆவது பிறந்த நாள் விழா புதுக்கோட்டை மாவட்ட சிவாஜி சமூகநலப் பேரவையின் சார்பாக அதன் மாவட்டத் தலைவர் அ.சுப்பையா தலைமையில் மச்சுவாடியில் இன்று(அக்.1) கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி மோகன்ராஜ், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க பட்டய தலைவர் க.நைனாமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக  சிவாஜி சமூக நலப்பேரவை மாவட்டசெயலாளர் புதுகைப்புதல்வன் வரவேற்றார் நீங்காத எண்ணம், மேல்நாட்டு மருமகள் திரைப்பட இயக்குனர் எம்.எஸ். ஷாஜகான்  கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் மருத்துவர் க.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சியில் சமூக நலப் பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பீர்முகம்மது, வட்டத்தலைவர் மூர்த்தி, பூக்கடை முருகேசன், சு.சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Top