logo
பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் முறை விரைவில் அறிவிப்பு:  தமிழக கல்வி அமைச்சர் தகவல்

பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் முறை விரைவில் அறிவிப்பு: தமிழக கல்வி அமைச்சர் தகவல்

07/Jun/2021 11:36:36

சென்னை, ஜூன்: பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து குழுவை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

மேலும், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் மு..ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  செய்தியாளர்களிடம் கூறியதாவது: 12 -ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் வெளியிடப்படும். இது அனைத்து தரப்பினரும் ஏற்கக்கூடியதாக இருக்கும்.

அதே போன்று  பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விட்டது. அதுவும் விரைவில் வெளியிடப்படும். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது குறித்தும் ஆலோசனை செய்தோம். நீட் எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தில் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

Top