logo
பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக  சட்டத்துறை  அமைச்சர் ரகுபதியிடம்  மருந்தாளுநர் சங்கத்தினர் மனு

பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் மருந்தாளுநர் சங்கத்தினர் மனு

06/Jun/2021 09:30:01

புதுக்கோட்டை, ஜூன்: மருத்துவனைகளில் நிலுவையிலுள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழக அரசு  விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு பதிவுபெற்ற மருந்தாளுநர்கள் சங்கத்தினர் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியை புதுக்கோட்டையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

 இது தொடர்பாக, தமிழ்நாடு பதிவுபெற்ற மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் டி. கார்த்திக்,  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியிடம் அளித்துள்ள மனு விவரம்:

கடந்த ஆட்சி காலத்தில் மருந்தாளுநர் பணி இடங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படை சுகாதார அமைப்பில் முக்கியமாகக் கருத்தப்படும்   மருந்தாளுநர் பணி இடங்கள் நிரப்படாததால், இந்த பெருந் தோற்று காலத்தில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய சேவை தடைபட்டுள்ளது. மேலும் மருந்தாளுனர்கள் தங்களுக்கான வாய்ப்பு கிடைக்காமல், வாழ்வாதாரத்தை இழந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆதலால், நீதிமன்ற கூற்றின்படி சுகாதாரத்துறை விரைவில் அவர்களின் கருத்தை தெரிவிக்க வலியுறுத்தவும், தொற்றின் விளைவுகளை கருத்தில் கொண்டு தாமதமின்றி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட  உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு, வழக்கில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில், மக்களுக்கு மருந்தாளுனர்களின் சேவை இந்த கொரோனா காலத்தில் நிச்சயம் கிடைத்திடும். இந்த வழக்கை விரைவில் முடிவிற்கு கொண்டு வைந்து மருந்தாளுநர்கள் வாழ்வில் விடியல் கிடைத்திட தாங்கள் வழிவகை செய்து தரும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்..

மனுவைப் பெற்றுக்கொண்ட  சட்டத்துறை   அமைச்சர் ரகுபதிஇந்தக் கோரிக்கையை  தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று   நிறைவேற்றிட உரிய முயற்சிகளை மேற்கொள்வதாக நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

 

Top