logo
ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருக்கும் நட்சத்திரத்திற்கும்  பரிந்துரைக்கப்படும்  மரங்கள்...!

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருக்கும் நட்சத்திரத்திற்கும் பரிந்துரைக்கப்படும் மரங்கள்...!

04/Jun/2021 08:15:45

நம்முடைய உணவும், உடலும், சுவையும், மன எண்ணங்களின் உணர்வுகளும், ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளது என்பதை சித்தர் பெருமக்களின் அரும்பெரும் மருத்துவ நூல்களில் நாம் அறிகிறோம்

மேலும் ஜோதிட சாஸ்திரங்களில் கூட நம்முடைய உணவுப் பொருள்களின் முக்கியத்தை பற்றி தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர் அதுபோல இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் பிறந்த நேர...கால தேதியில் இருந்து கணிக்கப்பட்ட ஜாதகத்தில் வாயிலாக அவரவர்களின் நட்சத்திரத்திற்கேற்றபடி ஒவ்வொரு மரங்களும் பரிந்துரைக்கப்படுகிறது.இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பொதுவாக மரங்கள் நமக்கு தரும் வரங்கள் ஆயிரமாயிரம்.

உதாரணமாக, இன்றைய கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்படுபவர்களின் பிரதானமான மிகப்பெரிய பிரச்சினை மூச்சுத்திணறல். இந்த மூச்சுத் திணறல் வர காரணம் என்ன....? என்று நுட்பமாக ஆய்வு செய்து பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கான உயிர் சத்து நிறைந்த பிராண வாய்வு என்று குறிப்பிடும் அந்த உயிர் காற்று பற்றாக்குறையாக இருக்கின்ற காரணத்தால் தான்.

நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு சுவையைப் போலவே... ஒவ்வொரு மனிதர்களுக்கும் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பிராண வாயுகளில் தனக்கென ஒரு உயிர்ச்சத்து காற்று ஏகமாக பரவி கலந்து உள்ளதாக கருதப்படுகிறது

அந்த வகையில்தன்  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரித்தான மரங்களை நமது சித்தர் பெருமக்கள் நுட்பமாக ஆய்வு செய்து வைத்துள்ளனர்.இதைப் பற்றி  மிகவும் சுருக்கி தருகிறோம்.

ஆக மொத்தத்தில் நாம் மரங்களையும் நாம் சுவாசிக்கும் காற்றையும் மறந்த வருகிறோம், மரங்களை மறந்துவிட வேண்டாம் என்பதற்காக தான் இந்த குறிப்பு. இது ஒரு நீண்ட நெடிய குறிப்பாக இருந்தாலும் கவனமாக படித்து பயனடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்

27- நட்சத்திரத்திற்குரிய மரங்கள்..!

 அசுவணி----எட்டி. பரணி ----நெல்லி. கார்த்திகை--அத்தி. ரோகிணி ---நாவல். மிருகசீரிடம்-கருங்காலி.திருவாதிரை-செம்மரம்

.புனர்பூசம் --மூங்கில். பூசம் -----அரசு.ஆயில்யம்--புன்னை .மகம் ---ஆல். பூரம் ----பலா. உத்திரம் --அலரி. அஸ்தம்---வேலம்.

சித்திரை--வில்வம். சுவாதி----மருது. விசாகம்--விலா. அனுஷம்--மகிழம். கேட்டை--குட்டிப்பலா. மூலம்----மா. பூராடம் - வஞ்சி

உத்திராடம்-சக்கைப்பலா. திருவோணம்-எருக்கு. அவிட்டம்---வன்னி. சதயம்-----கடம்பு. பூரட்டாதி -கருமருது

உத்திரட்டாதி-வேம்பு. ரேவதி------இலுப்பை..

நமது கலாச்சாரத்தில் மிகவும் வலியுறுத்தி குறிப்பிடுவது எதையும் முழுமனதுடன் நம்பிக்கையுடன் செயல்படுத்தினால் மட்டுமே அந்தந்த காரியங்கள் வெற்றியும், பெறும் நிறைவு பெறும் என்று மனோதத்துவ ரீதியாக குறிப்பிட்டுள்ளனர்.அதாவது செயல்படுத்தக் கூடிய காரியத்தில் பயபக்தி வேண்டும் என்பதுதான் அதனுடைய அடிப்படையான நோக்கம்.

அந்த வகையில் பக்தி மார்க்கத்துடன் கலந்தே அனைத்து விஷயங்களும் தழுவி நிற்பதால் அதனுடைய தன்மைகள் மேன்மை அடைகிறது என்று சித்தர் பெருமக்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும் ஒவ்வொரு மரங்களும், போற்றி வணங்க வேண்டிய ஸ்தல விருட்சங்கள் என்றும் நாம் அறிந்துள்ளோம்ஒவ்வொரு நட்சத்திரத்தை சார்ந்தவர்களுக்கு நமது ஆன்மீக பெரியோர் கள் அருளி உள்ள அதிதேவதையாக விளங்கும் கடவுள்களை ஒன்பது வகையாக பகுத்துள்ளனர்.

 அவைகள் எவை என்றால்....

 1. அஸ்வினி, மகம், மூலம் _     விநாயகர்.

 2. பரணி , பூரம் , பூராடம் _        ரங்கநாதர்.

 3. கிருத்திகை, உத்திரம், உத்திராடம்  _ ஆஞ்சநேயர்.

 4. ரோஹிணி, அஸ்தம், திருவோணம் - சிவன்.

 5. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்  -    துர்க்கை.

6. திருவாதிரை, சுவாதி, சதயம்    -    பைரவர்.

7. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி   -    ராகவேந்திரர்.

8. பூசம், அனுஷம், உத்திரட்டாதி   -    சிவன்.

9. ஆயில்யம், கேட்டை, ரேவதி    -    பெருமாள்.

ந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய மரங்களை அவர்களுக்கான அதிதேவதையான  கோயில்களிலேயே நட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை..ஏதேனும் ஒரு கோவில்களிலோ , தனக்கு சொந்தமான இடத்திலோ நட்டு அனுதினம் நீர் ஊற்றி பராமரித்து வர சகலவிதமான தோஷங்களும் விலகி வாழ்வில் நன்நிலையை விரைவில் பெறுவர் என்பது திண்ணம். என்பது நமது முன்னோர்களின் வாக்கு..எனவே இது போன்ற நல்ல பல விஷயங்களை அறிந்து கொண்டு... எதையும் வரும் முன் காப்போம்..  தொகுப்பு:- சங்கரமூர்த்தி... 73731 41119.

Top