25/Nov/2020 07:22:51
புதுதில்லி: லேண்ட்லைனில் இருந்து, மொபைல் போன்களுக்கு அழைக்க ஜன. 1-ஆம் தேதியிலிருந்து பூஜ்யம் (0) கட்டாயம் சேர்த்து டயல் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: லேண்ட்லைனிலிருந்து மொபைல்போனுக்கு அழைக்கும்போது, மொபைல் எண்ணுக்கு முன்பாக, பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என கடந்த மே 29-ஆம் தேதி டிராய் பரிந்துரைத்திருந்தது. இப்பரிந்துரையை ஏற்று, வரும் ஜன.1-ஆம் தேதி முதல் இதனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
இப்புதிய முறையை செயல்படுத்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஜன.1 வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பின் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.