logo
ஆன்லைன் மூலம் மதுபானங்கள் டெலிவரி செய்ய தி்ல்லி மாநில அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடைமுறைப் படுத்தப்படுமா?

ஆன்லைன் மூலம் மதுபானங்கள் டெலிவரி செய்ய தி்ல்லி மாநில அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடைமுறைப் படுத்தப்படுமா?

01/Jun/2021 07:16:08

புதுக்கோட்டை, ஜூன்: மதுபானங்கள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்ய  தி்ல்லி மாநில அரசு அனுமதி அளித்தைப் போல தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையால்  உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் உயிரிழந்து வருகின்றனர்கொரனா பாதிப்பில் இந்தியா மற்ற நாடுகளைப்பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் உள்ளது.

கொரொனா தொற்றால்  ஆண்டான் முதல் கடைக்கோடி மக்கள் வரை  பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இதில் முக்கிய  அரசியல்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர், நடிகைகள், பெருத்தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என  பலரும் உயிரிழந்துள்ளனர்.

 ஊரடங்கு, முழு முடக்கம் போன்றவற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உலக மக்களின்  எதிர்காலம் குறிப்பாக இந்திய மக்களின் வாழ்வாதாரம்  எதிர்காலம் என்னவாகும்  என்பதை கணிக்கமுடியாமல் அரசுகள் திணறி வருகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்களின் சிரமத்தை  தவிர்க்கும் வகையில்   அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்கே  கொண்டு சேர்க்கும்  நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

இது ஒரு புறம், மற்றொரு புறம்  ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருவாய் கொடுத்து வரும் மதுபான விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை கடந்த 20 நாள்களுக்கு மேலாக மூடிப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இதே போல சுமார் 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டன. மதுபானம் கிடைக்காத அக்காலகட்டத்தில் வீட்டில் மதுபானம் தயாரிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்தன. மேலும் கள்ளச்சந்தை வியாபாரிகள் மதுபான விற்பனை மூலம்  கோடிக்கணக்கில் சம்பாதிக்கமுடிந்தது.

அதே போல இந்த ஆண்டின் கொரோனா இரண்டாவது அலை தொற்று மீண்டும் நாட்டு மக்களை கட்டிப்போட்டுவிட்டது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் தாக்கம் உக்கிரமாக இருப்பதால் உயிரிழப்பும், தொற்றும் அதிகரித்ததால்  அரசாங்கம் செய்வதறியாது  திகைத்து நிற்கிறதுதடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற காரணிகளை மக்களை புரட்டிப்போட்டு வருகின்றன.

 

இதே போல, குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மதுபானம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். எப்படியாவது குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ள குடி நோயாளிகள் தங்களுக்கு போதை வேண்டும் என்பதற்காக கள்ளச்சாராயம் அல்லது போதை மாத்திரை, போதை ஊசிகளைத் தேடி  பைத்தியம் பிடித்தது போல  அலைந்து திரிகின்றனர்உத்திர பிரதேச மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்ட போலி மதுவைக்குடித்த 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையால் வழக்கம்போல டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் தலைவிரித்தாடுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் லிட்டம் சாராயமும், அதற்கான ஊரல்களையும் போலீஸார் கைப்பற்றி அழித்துள்ளனர். சிலரை கைது செய்தனர். எனினும கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறைந்தபாடில்லை.சில நாள்களுக்கு முன் தஞ்சை மாவட்டத்தில்  மதுபானத்துக்குப் பதிலாக போதை கிடைக்க ஏதோ ஒரு  வெள்ளைத்திரவத்தை குடித்து 2 பேர் கண்பார்வையிழந்ததுடன் உயிரையும் பறிகொடுத்தனர்.

இந்த அவலநிலையைப் போக்கவும் கள்ளச்சாராயத்தை ஒழித்து உயிர்பலியை தடுக்கவும்  ஹரியானா, பஞ்சாப், கேரளம், கர்நாடக மாநில அரசுகளைப் போல தமிழக அரசு மாற்று   நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது  தலைநகர் தில்லி மாநிலத்தில் மதுப்பிரியர்களின் வசதிக்காக, ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் வழியாக ஆர்டர் கொடுத்தால் , வீட்டுக்கே டெலிவரி செய்ய  தில்லி  அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதுஇந்த நடவடிக்கை தமிழகத்தில் தற்போது அவசியமாகிறது. கவனிக்குமா தமிழக அரசு.

Top