logo
அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும்: தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  தகவல்

அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும்: தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

29/May/2021 06:38:24

ஈரோடு, மே: சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வாகனங்களில் வரும் நோயாளிகளை காத்திருக்க வைக்க கூடாது என்பதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் என்றார். தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர்  சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

 பின்னர் செய்தியாளர்களிடம்  மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வர்  நாளை (மே.30)  பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் புதியதாக உருவாக்கப்பட்டு வரும் படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.

95  லட்சம் தடுப்பூசிகளில் 82 லட்சம் தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. இன்னும் 6 லட்சம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில்  உள்ளது. அதுவும் 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். கையிருப்புக்கு ஏற்ப கொரோனோ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது . மேலும் 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிக்கு தமிழக அரசுரூ. 85 ரூபாய் கோடி செலவில் 13 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசி  வாங்கப்பட்டுள்ளதுஇன்னும் 12  லட்சம் தடுப்பூசி வர வேண்டியுள்ளது. அது வந்தவுடன் அனைத்து  மாவட்டங் களுக்கும்  பிரித்து விநியோகிக்கப்படும்.

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற காரணத்தால் தான் 3.5 கோடி தடுப்பூசிக்கு  உலகளா விய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் , அந்த பணி ஜூன்  4 -ஆம் தேதி முடிவுற்று ஜூன் 5 -ஆம் தேதி திறக்கப்படும் என்றும், அதன் பின்னர் 6 மாத காலத்திற்குள் தடுப்பூசி கொள்முதல் நிறை பெறும்.

தமிழகத்திற்கு  கூடுதலாக தடுப்பூசி பெற  தில்லியில் டி.ஆர்பாலு முகாமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 10 ஆண்டுகளாக செயல்படாத  செங்கல்பட்டு HLL தடுப்பூசி மையத்தை திறக்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்து இருப்பதாகவும்அனுமதி கிடைத்தால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை நாமே தயாரித்து கொள்ள முடியும் . சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வாகனங்களில் வரும் நோயாளிகளை காத்திருக்க வைக்க கூடாது என்பதற்காக அனைத்து மருத்துவ மனைகளிலும் ஜூரோ டிலே வார்டு அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆய்வின்போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, ஈரோடு கோட்டாட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்

 

 

 

 

 

Top