logo
தீயாய் பரவும் நோய்த்தோற்று... தொடரும் இறப்புகள்...போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட சிபிஎம் வலியுறுத்தல்

தீயாய் பரவும் நோய்த்தோற்று... தொடரும் இறப்புகள்...போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட சிபிஎம் வலியுறுத்தல்

24/May/2021 10:07:00

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் தீயாய்ப் பரவும் நோய்த்தொற்று, தொடரும் மரணங்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை என பொதுமக்கள் படும் கொடுந்துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. பெரும்பாலான மக்கள் தங்களை ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கோ, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கோ முன்வருவதில்லை. சளி, காய்ச்சல், இருமல், உடம்புவலி உள்ளிட்ட நோய்க்கா அறிகுறிகள் உள்ளவர்கள்கூட தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.

இதற்கு காரணம் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால் தாங்களை ஒரு குற்றவாளிகளைப் போல கருதி மன உளைச் சளுக்கு ஆளாக நேரும் என நினைக்கின்றனர். மேலும், மருத்துவமனைகளில் அனாதைகளைப்போல அடைத்து வைக்கப் பட்டு போதிய சிகிக்சை அளிக்கப்படாமல் இறந்துவிடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம் காரணமாக உள்ளது.

இதனால், நோய் முற்றி மூச்சுத்தினறல் ஏற்படும் நிலையிலேயே பெரும்பாலானவர்கள் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளோ நோயாளிகளை உறுதியாக காப்பாற்ற முடியும் என்ற நிலையில் உள்ளவர்களைத்தான் சிகிச்சை அளிக்க அனுமதிக்கின்றன. இந்நிலையில், அவர்களின் ஒரே புகழிடம் அரசு மருததுவமனைகளே.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள தாலுகா மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எந்தவிதமான எற்பாடும் ல்லை. பொதுவாகவே, பெரும்பாலான தாலுகா மருத்துவமனைகள் எந்தவித நோயாளிகளையும் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதில்லை. அங்கு வரும் அனைவரையும்  புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் மையங்களாகவே செயல்படுகின்றனர். இந்நிலையில், கோவிட் சிகிச்சை என்பதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தற்போதைய நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அங்கு போதிய ஆக்ஸிஜன் கருவிகள் இல்லாததால் நாள்தோறும் இரட்டை இலக்கத்தில் மரணம் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோன நோய்த்தொற்றுள்ளவர்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றனர்.

அவர்களை சமாளிக்க முடியாமல் மருத்துவர்களும், செவிலியர்களும் திண்டாடி வருகின்றனர். தீவிரப் பாதிப்பு இல்லாத நோய்த்தொற்றாளர்களை தனிப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக குடுமியான்மலை வேளாண் கல்லூரியிலும், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியிலும் தொடங்கப்பட்ட சிகிச்சை மையங்கள் இதுநாள்வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனாலேயே, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோய்த்தொற்றாளர்கள் படையெடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய இக்கட்டானை நிலையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை. கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். குடுமியான்மலை வேளாண் கல்லூரி, புதுக்கோட்டை அரசு மகளில் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்களை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இத்தகைய மையங்களை அனைத்து தாலுகாக்களிலும் ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து வட்டார அரசு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியுடன் சிகிக்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். புதிதாக அறிவிக்கப்பட்ட மருத்துவர், செவிலியர் மற்றும் பணியாளர் நியமனங்களை உடனடியாக செய்ய வேண்டும். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கும், அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை அளித்துக்கொள்வதற்கும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் முன்வரும் வகையில் தமிழக அரசம், மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

Top