logo
கீரனூர் பேரூராட்சியில் முககவசம் அணியாதவர்களுககு   அபராதம் விதிப்பு

கீரனூர் பேரூராட்சியில் முககவசம் அணியாதவர்களுககு அபராதம் விதிப்பு

15/Apr/2021 09:38:20

புதுக்கோட்டை, ஏப்: கொரோனா வைரஸ்  இரண்டாம் அலை பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை  கடைப்பிடிக்காத பொதுமக்களுக்கு கீரனூர் பேரூராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முககவசம் அணியாமல் பொதுஇடங்களுக்கு வருபவர் களுக்கு200 ரூபாய் அபராதமும், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக் காதவர்களுக்கு  ரூபாய் 500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலைப் பேரூராட்சி  செயல் அலுவலர் மாதேஸ்வரன் தலைமையில்  துப்பரவு மேற்பார்வையாளர் மகேஸ்வரி, வரித்தண்டலர்கள் தங்கராஜ்,தேவிகா,குடிநீர் பணியாளர்கள் மருதராஜ், அழகர், கள ஒருங்கிணைப்பாளர் சீமான்   மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கீரனூர் பேருந்து நிலையம், கடைவீதி,  நகர் பேருந்து பயணிகள்,  ஆட்டோ பயணிகள் மற்றும் இருசக்கர  வாகனங்களில் செல்பவர்களிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்து அனைவரிடமும்  முககவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

Top