logo

கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு பணியை விரைவாக முடிக்கவேண்டும்: பாசன விவசாயிகள் சபை தலைவர் கோரிக்கை

13/May/2021 05:06:35


 ஈரோடு, மே: கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு பணியை விரைவாக முடித்து, சென்ன சமுத்திரம் பகிர்மானத்தில் கடைமடை நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் பணி யை முடிக்க வேண்டும், என, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை தலைவர் எம்.முத்துசாமி, செயலாளர் எஸ்.பெரியசாமி ஆகியோர் ஈரோடு ஆட்சியர்  சி.கதிரவனிடம் மனு வழங்கினர்.

அவர்களது மனுவில் கூறியதாவது: கீழ்பவானி பாசன கட்டமைப்பை சீரமைக்கும் திட்டத்தில், பொதுப்பணித்துறையினர், 709.60 கோடி ரூபாய் செலவில் பணிகளை துவங்கி உள்ளனர். கடைமடை பாசனத்தில், சென்னசமுத்திரம் பகிர்மான கடைமடை நிலங்களுக்கு கடந்த பல ஆண்டாக உரிய நீர் கிடைக்கவில்லை. எனவே, சென்னசமுத்திரம் பகிர்மானத்தில் உள்ள, எட்டு பாசன சபைகளும் இணைந்து முறை வைத்து நீர் பாய்ச்சுகிறோம்.

எல்.8 பாசன சபையான எங்கள் பகுதிக்கு நீர் வழங்க, எல்–1 முதல், எல்.7 வரை ஏழு சபை களும் ஒவ்வொரு நாளும் தமது பகுதிக்கான பாசன நீர் மதகுகளை அடைத்து கடைமடை யிலுள்ள எல்.8 விவசாயிகள் பாதிக்காத வகையில் உதவுகின்றனர்.

இச்சூழலில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக நிலவுகிறது. மற்றொரு தரப்பினர், ஆயக்கட்டில் இல்லாத நிலங்களுக்கு கசிவு நீரை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தற்போது கால் வாய் சீரமைப்பு பணிகளை சீர்குலைக்க முயல்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை நிர்வாகமும், பாசனதாரர்களுக்கு தண்ணீர் கிடைக்க விரைவாக பணிகளை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு கேட்டுக் கொண்டனர்.

Top