logo
உலக இருதய தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் வாக்கத்தான் உலக சாதனை முயற்சி

உலக இருதய தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் வாக்கத்தான் உலக சாதனை முயற்சி

29/Sep/2020 11:15:39

புதுக்கோட்டை கம்பன் நகரில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் வாக் பார் யுவர் ஹார்ட் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆசியா பசிபிக் ரெக்கார்ட் மற்றும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு உள்ளிட்ட புதிய உலக சாதனை முயற்சிக்காக ரோட்டரி மாவட்டம்-3000 மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள ரோட்டரி சங்கங்கள் பல நாடுகளில் உள்ள ரோட்டரி சங்கங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இன்று தொடங்கி தினசரி குறைந்தபட்சம் இரண்டு கிலோ மீட்டர் வீதம் 21 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் -சான்று வழங்கப்பட உள்ளது. மேலும் இன்று தொடங்கிய வாக்கத்தானை ஜூம்ஆப் மற்றும் பேஸ்புக் மூலம் பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாக்கத்தான் கம்பம் நகரில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட வழிகளில் சென்று மீண்டும் கம்பன் நகரை வந்தடைந்தது. உலகம் முழுவதும் 150 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்துள்ள இந்த வாக்கத்தானை அவரவர்கள் இருந்த இடத்திலிருந்தே இதில் பங்கேற்று உள்ளனர் மேலும் இதில் அதிக தூரம் வாக்கத்தான் செல்பவர்களுக்கு சான்றுகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

Top