logo
தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

28/Sep/2020 06:57:05

தமிழகத்தில் திங்கள்கிழமை (28.9.2020)   புதிதாக 5,589 பேருக்கு கொரோனா  நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

 தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா  நோய்த் தொற்றுகொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய  புள்ளி விவரங்கள  அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,589 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,283 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்துள்ளது. அந்த செய்திக் குறிப்பில் மேலும் 70 பேர் (அரசு மருத்துவமனை -41, தனியார் மருத்துவமனை -29) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளதுமேலும், ஒரே நாளில் 5,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,30,708 பேர் குணமடைந்துள்ளனர். 46,306 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 80,465 மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 71,81,125 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் கோவையில் தலா 1 பரிசோதனை ஆய்வகங்களுக்கு புதிதாக அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மொத்த கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 118.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 97 பேருக்கு கொரோனா  பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  28.09.2020 -இன்று  புதிதாக 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மொத்த பாதிப்பு 8,891. குணமடைந்து வீடு திரும்பியோர் 8,035. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் 718. உயிரிழப்பு 138.

 

Top