20/Feb/2021 08:28:42
புதுக்கோட்டை, பிப் விராலிமலையில் நாளை(பிப்.21) நடைபெறும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டத் தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை முன்னாள் எம்எல்ஏ- வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் தலைமையிலான குழுவினர் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்தனர்.:
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100-ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க கால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டத்தை விராலிமலை அருகே குன்னாத்தூரில் 21/02/2021-அன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வரவேற்கும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டது.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரின் ஆலோசனைக்கு ஏற்ப இளைய மன்னர் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான் மற்றும் கம்பன் கழகம் தலைவர் இரா.சம்பத்குமார் மற்றும் குளத்தூர் மகாத்மா கல்வி நிறுவன தாளாளர் ஆர் ரவிச்சந்தினரன், நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் எஸ்ஏஎஸ். சேட், ராயர் ஆகியோர் கொண்ட குழுவினர்
சமூக ஆர்வலர்கள் மற்றும் புதுக்கோட்டை வர்த்தக சங்கத்தை சார்ந்தவர்கள் மற்றும் அறக்கட்டளைகள் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு ரோட்டரி கிளப் தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்கள்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் எனவும் வரவேற்புக்குழுவினர் தெரிவித்தனர்.