logo
ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் 104 -எண்ணை உதவிக்கு அழைக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் 104 -எண்ணை உதவிக்கு அழைக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

24/Apr/2021 04:56:26

சென்னை, ஏப்: தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் 104 -என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா  நோய் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.  கொரோனா தொற்றால்  பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற  கொரோனா சிகிச்சை  அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரிக்குமென எதிர்பார்க்கப் படுகிறது.  தமிழகத்திலுள்ள  ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறை களை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன.  

ஆக்ஸிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய தேவைப்படும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

அத்தகைய  மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழகத்திலுள்ள  மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற  எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்.  


Top