logo
கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நாளை தெப்ப உற்சவம்

கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நாளை தெப்ப உற்சவம்

28/Sep/2020 03:53:20

ஈரோடு:கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் புரட்டாசி பிரமோற்சவ தேர்த்திருவிழாவையொட்டி இன்று இரவு 7  மணிக்கு குதிரை வாகனத்தில் ஸ்ரீதேவி, பூ தேவியுடன் பெருமாள் எழுந்தருளுகிறார். நாளை இரவு, 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. கொரோனா பரவல் பாதுகாப்பு நடவடிக்கையாக இம்முறை கோயில் வளாத்திலேயே தற்காலிகமாக அமைக்கப்படும் தெப்பக் குளத்தில் கஸ்தூரி அரங்க நாதர் எழுந்தருளுகிறார். நாளை மறுநாள் காலை, 6  மணிக்கு சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதல் நிகழ்ச்சியுடன், இந்த ஆண்டு பிரமோற்சவ தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது.


Top