logo
செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் காலை 7 முதல் 8 மணி வரை அனுமதி

செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் காலை 7 முதல் 8 மணி வரை அனுமதி

01/May/2021 01:10:29

புதுக்கோட்டை, மே:   புதுக்கோட்டை அரசு மகளில் கலைக்கல்லூரியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத்தினர் வாக்கு எண்ணும் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 8 மணி வரை உள்ளே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் தெரிவித்த தகவல்: புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி பிரதான வாயில்  வழியாக நாளை காலை 7 முதல் o 8 மணி வரை ஊடகத்துறையினர் அனுமதிக்கப்படுவர். (வாகனங்களை உள்ளே கொண்டு  செல்ல அனுமதி இல்லை).

தேர்தல் ஆணையத்தால்  வழங்கப்பட்டுள்ள  தங்களுக்கான அடையாள சீட்டுடன், கொவைட்-19 பெருந்தொற்றை கருத்தில்கொண்டு பரிசோதனை செய்து தொற்று இல்லை எனும் சான்றிதழ்  இருந்தால் மட்டுமே ( covid report link- http://www.covidpdktmc.com/ )தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் சரிபார்த்த பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

 செய்தி(Media centre) மையத்தில் செய்தியாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்:

ஒவ்வொருவருக்கும் முக கவசம், முக கேடயம், கிருமி நாசினி, கையுறை ஆகியவை வழங்கப்படும்.( mask, face shield, sanitizer & hand gloves package). செய்திகளைப் பார்க்க பெரிய அளவிலான 6 தொலைக்காட்சிகள். கணினி, ஸ்கேனர், பிரிண்டர் மற்றும் 2 டைப்பிஸ்டுகள் பணியாற்றுவர்( Computer, scanner & printer 2 numbers with typist). மற்றும்  Plug  points 50 numbers.

6 சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகளை சம்பந்தப்பட்ட RO-விடம் பெற்று உடனுக்குடன் ஊடக மையத்தில் வழங்கும் வகையில் RI நிலையிலான 6 வருவாய் துறை அலுவலர்கள். RO-க்களால் ஒலிபெருக்கியில் அவ்வப்போது அறிவிக்கப்படும் வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஊடக மையத்தில் ஒலிபெருக்கி இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது மற்றும்  Refreshment with water facilities.

வாக்கு எண்ணும் இடங்களுக்கு செல்லும் ஒளிப்பதிவாளர்கள் கவனத்திற்கு:

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கும் பொழுது மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தங்களுக்கான காட்சிகளைப் பதிவு (visual) பதிவு செய்து  கொள்ள அனுமதிக்கப்படுவர்.

ஒளிப்பதிவாளர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக செல்வதை தவிர்த்து ஆட்சியர் பார்வையிடும் போதே குழுவாக தங்களுக்கு தேவையான படக்காட்சி( visuals)யை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உடன் வாக்குவாதம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட வசதிகள்  செய்தியாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் APRO & Office  staff பணியில் இருப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Top