logo
ஈரோடு ரயில் நிலையத்தில் முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அபராதம்

ஈரோடு ரயில் நிலையத்தில் முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அபராதம்

19/Apr/2021 07:01:00

ஈரோடு, ஏப்: ஈரோடு ரயில் நிலையத்தில் முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.

 கடந்த ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு பொது போக்குவரத்து சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதன்படி ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது .பின்னர் படிப்படியாக தொற்று  குறைய ஆரம்பித்ததால் பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு  வருகிறது.

அதிலும் முன் பதிவுகளுடன்  இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ரெயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று முதல் ரெயில் நிலையங்களில் பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500  அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை  முதல் ஈரோடு ரயில் நிலையத்தில் முக கவசம் அணியாமல் வந்த பயணிகள், ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த காலை மட்டும் 10 பயணிகளுக்கு தலா 500 ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டது. ரயில் நிலையங்களிலும், ரெயிலில் பயணிக்கும் போதும் பயணிகள் கண்டிப்பாக முக கவசம்  அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Top