logo
ம.பி பேருந்து கவிழ்ந்த. விபத்தில் பலியான 45 பேரின் சடலங்கள் மீட்பு: முதல்வர்

ம.பி பேருந்து கவிழ்ந்த. விபத்தில் பலியான 45 பேரின் சடலங்கள் மீட்பு: முதல்வர்

17/Feb/2021 11:20:42

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் பலியான 45 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

 

சீதி மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சட்னாவுக்குச் செல்லும் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்தது. இதில் உயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் பணி காலை முதல் நடைபெற்று வந்தது.இந்நிலையில், பலியான அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் சிவராஜ் செளகான் கூறுகையில், மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ. 10,000 உடனடியாக தர உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரம் வழங்குவதாக  பிரதமர் மோடி அறிவிப்பு

 சீதி மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு  50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சட்னாவுக்குச் செல்லும் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்தது. இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார்


Top