logo
குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா: 33 அடி குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கானோர் மாலை அணிவித்து வழிபாடு.

குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா: 33 அடி குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கானோர் மாலை அணிவித்து வழிபாடு.

08/Mar/2020 09:45:51

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி 33 அடி உயர குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கானோர் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.8)வழிபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் மாசிமகத்தில் நடைபெறும் திருவிழாவில், கோயில் முன்பு உள்ள ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற 33 அடி உயர குதிரை  சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில்,நிகழாண்டு திருவிழாவையொட்டி, சனிக்கிழமை கிராமத்தின் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம் ஆகியவற்றை கயிறு மூலம் கட்டி குதிரை சிலைக்கு அணிவித்தனர்.தொடர்ந்து, மாலை அணிவிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் காகித மாலைகளை எடுத்துவந்து, கோயிலின் இருபுறச்சாலையிலும் பல கி.மீ தூரம் வரிசையில் காத்திருந்து குதிரை சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர். கோயிலைச்சுற்றி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. திருவிழாவில்,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.


Top