logo
தேர்தலில் வாக்களிக்காதவர்களை  ஜனநாயகத்தின் கரும்புள்ளியாகப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..

தேர்தலில் வாக்களிக்காதவர்களை ஜனநாயகத்தின் கரும்புள்ளியாகப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..

13/Apr/2021 08:39:16

BY R.MOHANRAM... NEWS EDITOR/  புதுக்கோட்டை, ஏப்:  தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள்; 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள்; 7,192 பேர் 3-ஆம் பாலினத்தவர் உள்ளனர். 

இவர்களில்  4.57 கோடி வாக்காளர்கள் தமிழக சட்டப்பேரவை தேர்தலில்  வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2.31 கோடி பெண்கள், 2.26 கோடி ஆண்கள், 1,419 பேர்  3-ஆம் பாலித்தவர் வாக்களித்துள்ளனர்.  1.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. இந்தச்செய்திதான் இக்கட்டுரையின் மையப்பொருள். 

தேர்தலின் போது வாக்களிக்காமல் இருப்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் காணக் கூடிய அவல நிலையாகவே உள்ளது.  இந்தியாவில் நடந்த   பாராளு மன்றத் தேர்தலில் ஏறத்தாழ 67 சதவீதத்தினர் வாக்களித்தனர்.

சட்டமன்ற தேர்தலிலும்  உள்ளாட்சித்  தேர்தலிலும் 60 முதல் 70 சதவீத வாக்களர்களே வாக்களித்தனர். வாக்குரிமை யை வழங்குவது இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள அடிப்படை மனித உரிமையாக கருதப்பட்டாலும் வாக்களிப்பது அவரவர் சுய விருப்பத்தின் அடிப்படையில்  முடிவு செய்யப் படுகிறது. 

வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட ஒருவர் தேர்தலில்  வாக்களிக்கவில்லை என்ப தற்காக எந்த தண்டனையும் நம்நாட்டில் கிடையாது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தண்டனை வழங்குகின்றனர். உண்மையில் இதுதான் தேர்தலில் மக்கள் அனைவரையும் பங்கேற்க செய்யும்   அர்த்தமுள்ள நடவடிக்கையாகும்.

ஏனெனில், தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு  தயாராகின்ற போது  வாக்காளர்கள் 100 சதவீதம்  வாக்களிப்பார்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பின்  அடிப்படையில்  வாக்காளர்க ளுக்குத்  தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கிறது.

வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே தேர்தல் அலுவலர்கள், வாக்கு எண்ணும் பணியாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்படுகிறார்கள். பல்லாயிரம் கோடி நிதி செலவிடப்படுகிறது.

 இதில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த பல வகையான பிரசார உத்திகளையும் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலிலும் கையாண்டு வருகிறது. அதற்கு பலன் கிடைத்ததா என்றால்  இல்லை என்பதே உண்மை .

ஒவ்வொரு   தேர்தலில்  30 முதல் 40 சதவீதம் பேர்   வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயகத் தி்ன் சாபக்கேடு எனக் கூறினால் அதைவிட அபத்தமானது  வேறு ஏதுமில்லை. ஆனால், சாபக்கேடு என்ற வார்த்தை யை சாக்குப் போக்காக எத்தனை ஆண்டுகளுக்கு நாம் கூறிக்கொண்டே   இருக்க முடியும். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்கின்றனர் ஜனநாயகவாதிகள்.

தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. எனினும் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது கானல் நீராகவே இருக்கிறது. இதை நனவாக்க வேண்டியவர்கள் தங்கள் கடமையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

எனவே,  வாக்களிக்காதவர்களுக்கு தண்டனை கட்டாயம் என்ற கசப்பு மருந்தை மக்களிடம் புகட்டி யாக வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்கான சட்டத்தை  எதிர்வரும் காலங்க ளில் இந்தியாவில்  கொண்டு வந்தால் மட்டுமே ஜனநாயகம் ஆரோக்கியமானதாக இருக்கும்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில்  80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுக்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 282 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. அதுபோல மாற்றுத்திறனாளி களில் 28 ஆயிரத்து 531 விண்ணப்பங்கள் அளித்து 28 ஆயிரத்து 159 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு 28 பேர் தபால் ஓட்டு அளித்துள்ளனர். வயதானவர்களுக்கும் மாற்றுத்திற னாளிகளுக்கும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றுவதில்  இருக்கும் அக்கறை எந்தக்குறையுமில்லாதவர்களிடம் இல்லாமல் போனது  வேதனைக்குரியது.

இது குறித்து  புதுக்கோட்டை மூத்த வழக்குரைஞர்  ஏ. சந்திரசேகரன் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. நமது நாட்டின் ஜனநாயகத் தேர்தல் முறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருவதும் உண்மை. இந்திய தேர்தலில் கோடிக்க ணக்கான மக்கள் வாக்களித்து குடியரசைத் தேர்வு செய்யும் அளப்பறிய நிகழ்வை உலகநாடு கள் உற்று நோக்குகின்றன.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்போர் விகிதம் குறைந்து கொண்டே வருவது ஜனநாயகத் துக்கு ஆபத்தானது. ஜனநாயத்தின் மீதுதான் இந்திய குடியரசு கட்டமைக்கப் பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வாக்களிக்கத்தகுதியுள்ள நாட்டு மக்கள் அனைவரும் தேர்தலில் பங்கேற்றால்தான்  வெற்றி பெற்று அமையும் அரசாங்கம் உண்மையான மக்கள் அரசாக இருக்க முடியும்.

ஆனால், 100 சதவீத வாக்களர்களில் வெறும் 30 அல்லது 31 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சி ஆட்சி அதிகாரத்தில்  அசுர பலத்துடன் அமரும் சூழ்நிலை இந்தியாவில் தொடர்வது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. 

எனவே, ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மேற்கொள்ளும் விழிப்புணர்வு பிரசார உத்திகள் அனைத்துமே எந்தவித பலனையும் தரவில்லை.  குடியரசான இந்தியா  17-ஆவது மக்களவைத் தேர்தலையும்  16 -ஆவது சட்டப்பேரவைத் தேர்தலை தமிழகமும்  சந்தித்து விட்டது. ஆனால், 100 சதவீத வாக்குப்பதிவு இதுவரை சாத்தியப்படவில்லை.

ஆனால், அதை சாத்தியப்படுத்தத் தேவையான சட்டங்களையும்,  தண்டனையையும் கொண்டு வந்தாக வேண்டும். இதற்காக சில   நாடுகளில் உள்ளதைப் போன்ற சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் புதிய சட்டத்தை நடை முறைப்படுத்தலாம். நடமாடும் வங்கி சேவை, வீட்டுக்கே ரேஷன் பொருள்கள் வழங்குவதைப் போல நடமாடும் வாக்குச்சாவடி என்ற திட்டத்தை அமல்படுத்த யோசிக்க வேண்டும். 

தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு  அபராதம், வங்கி கடனுதவி, ரேஷன் பொருள்கள், அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு தடை விதிப்பது, இச்சலுகைகளைப் பெற வாக்களித்தி ருப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்குவது போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண் டும். 

அப்போதுதான் வாக்குப்பதிவில் 100 சதவீதம் என்ற இலக்கை நிறைவேற்ற முடியும். அடுத்த பொதுத்தேர்தலுக்குள்  இதை செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும்  தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், மத்திய அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், ஊடகங்கள் ஆகிய அமைப்புக ளுக்கு உள்ளது என்றார் அவர். 


Top