logo
கோபியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு சீல் 70 தனிநபர்களுக்கு அபராதம்

கோபியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு சீல் 70 தனிநபர்களுக்கு அபராதம்

10/Apr/2021 08:38:11


ஈரோடு ஏப்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில்  கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு தலா ரூ.5,000/- வீதம்  ரூ.60,000/- அபராதமும், கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டார். மேலும் முக்கவசம் அணியாத 70 நபர்களுக்கு தலா ரூ.200/- வீதம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகள், பல்பொருள் அங்காடி, உணவகம், தேநீர் விடுதிகள், காய்கறி அங்காடிகள், மருந்தகம் ஆகியவற்றிற்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்க வேண்டும், முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது .

முக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு எப்பொருளையும் விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு  ரூ.5,000/ வரை அபராதம் விதிக்கப்பட்டு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படுவ தோடு, கடுமையான நடவடிக்கை, மேற்கொள்ளப்படும் என்றும் பொது இடங்களுக்கு முக கவசம் அணியாமல் வரும் தனி நபருக்கு ரூ.200/ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் சனிக்கிழமை  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட மார்கெட், பேருந்து நிலையம், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கடைகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமாவட்ட லெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின்போது, அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு தலா ரூ.5,000/- வீதம் ரூ.60,000/- அபராதமும், கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டார். மேலும் முக்கவசம் அணியாத 70 நபர்களுக்கு தலா ரூ.200/- வீதம் அபராதம் விதித்தார்.

Top