31/May/2021 10:08:02
சிவகங்கை, மே: சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அண்ணா நகரில் ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் முன்னிலையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் சார்பில் பொது மக்களுக்கு கப சூர குடிநீர் வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்ற
முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு
கொரோனா
தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
மேலும் இந்த முகாமில்நோய் எதிர்ப்பு சக்தியை
தரக் கூடிய கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. முத்துராமலிங்கம் ,கீழப்பூங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜீவபாரதி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துசாந்த் பிரதீப் குமார், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர்கள் லதா, நித்யா, விமலாதேவி,முத்துக்குமாரி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மருதுபாண்டி.
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வீரையா, மல்லிகா, ஒன்றிய
கவுன்சிலர் கண்ணன், மகேஸ்வரி,நதியா இளஞ்செழியன், லட்சுமி மாரி,துணைச் செயலாளர்கள் கணபதி சுப்பிரமணியன், ஆறுமுகம், சோமசுந்தரம், இளைஞர் அணிசுரேஷ்குமார்,நேரு இளைஞர் மன்றம் அன்பழகன்,கீழப்பூங்குடி
அய்யனார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.