logo
தடங்கலின்றி நடைபெற்ற நார்த்தாமலை  முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

தடங்கலின்றி நடைபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

09/Apr/2021 11:28:47

புதுக்கோட்டை, ஏப்:புதுக்கோட்டை அருகேயுள்ள நார்த்தாமலை  முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் தடங்கலின்றி வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

 புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நார்த்தாமலை  அருள்மிகு  முத்துமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்  திருவிழா கடந்த 4-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி  தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வீதிஉலா நடைபெற்றது அதனைத்தொடர்ந்து ஒன்பதாம் நாள் (12.4.2021) அன்று நடைபெற இருந்த தேர் திருவிழாவானது இரண்டாம் கட்ட கொரோனா   பரவலால் பொது மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில்நாள்தோறும் பாதிக்கப்பட்டு அதிகரித்து வருகின்றது.

இதனை தடுக்கும் விதமாக 12-ஆம் தேதி  நடைபெறவுதாக இருந்த தேரோட்டத்தை  மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி ரத்துசெய்து உத்தரவிட்டார்.  இதனையடுத்து கோவில் நிர்வாகம் நார்த்தாமலை சுற்றியுள்ள கிராமங்களுக்கு 9.4.2021  வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும் என  தகவல் தெரிவிக்கப் பட்டது .

இதனையடுத்து பொதுமக்கள் கோயிலில் திரண்டனர். இதனையடுத்து முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்தனர். இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து அரோகரா அரோகரா என்று முழக்கமிட்டு  இழுத்துச் சென்றனர் தேரில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Top