logo
வெளியூர் பயணங்களுக்கு  இ - பாஸ் தேவையில்லை… இ-பதிவு மட்டுமே போதும்: தமிழக அரசு விளக்கம்

வெளியூர் பயணங்களுக்கு இ - பாஸ் தேவையில்லை… இ-பதிவு மட்டுமே போதும்: தமிழக அரசு விளக்கம்

15/May/2021 01:46:45

சென்னை: மாவட்டங்கள், மாவட்டங்களுக்குள் செல்ல - பாஸ் தேவையில்லை, அதற்கு பதிலாக  - பதிவு ( E registration) இருந்தால் போதும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் முன் நிற்கும்  சவாலான பணியாகும்அரசின் அனைத்துத்துறைகளும்  அதில்தான் முழு  கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் ஒரு பக்கம் விரைவு படுத்தப்பட்டுள்ளன. எனினும்  மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மேலும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

அதன்படி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வருவவோருக்கு  - பதிவு என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாவட்டங்களுக்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும் செல்ல   - பதிவு முறை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் இந்த அறிவிப்பானது  - பாஸ் கட்டாயம் என்ற பெயரில் செய்திகளாக வெளியானது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் நடந்த கசப்பான அனுபவங்களால் மக்களிடம் குழப்பம் ஏற்பட்டது.

 அதற்கு விளக்கமளித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அதாவது பாஸ் என்பது வேறுபதிவு என்பது வேறு. மாவட்டங்களுக்குள், மாவட்டங்களில் பயணம் செய்ய பதிவு கட்டாயம்இந்த பதிவு என்பது என்ன அதை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.

இந்த -பதிவானது  இ- பாஸில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.இந்த -பதிவு எடுக்க https://eregister.tnega.org என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ததற்கான ஆதாரத்தை வைத்து கொண்டு நாம் எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு பயணிக்கலாம்இந்த சுலபமான  நடைமுறையை தான் இ- பாஸ் என்று பொதுமக்களால் தவறாக அர்த்தம் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 இ- பாஸ் பெற அதற்கான இணையத்தில் விண்ணப்பித்து, ஒப்புதல் பெற்று அதற்கான ஆவண சான்றை பயணத்தின் போது காட்ட வேண்டும. ஆனால் -பதிவில் நாம் விண்ணப்பித்து இருக்கிறோம் என்ற ஆவணத்தை காட்டினாலே பயணிக்கலாம். எந்த இடையூறும் இல்லை. பொது மக்கள் இந்த முக்கிய வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

Top