logo
 கொரோனா பரவல்: நார்த்தாமலை  முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் மற்றும்  உள்ளூர் விடுமுறை ரத்து

கொரோனா பரவல்: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் மற்றும் உள்ளூர் விடுமுறை ரத்து

08/Apr/2021 11:23:50

 கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவும், அதற்காக 12.4.2021 -இல் அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர்  மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. 

தற்போது உள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகாpத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (நுஒஉநிவ ஊழவெயinஅநவெ ணுழநௌ) மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது. 

கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.04.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா 12.4.2021 அன்று நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த தேர்த்திருவிழா தற்பொழுது கொரோனா நோய் கட்டுப்பாட்டின் கீழ் ரத்து செய்யப்பட் டுள்ளது.  மேலும் 12.4.2021 அன்று  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டு, அன்றையதினம் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. 


Top