21/Mar/2021 11:01:07
புதுக்கோட்டை,மார்ச்: புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட போஸ் நகர் மற்றும் யூஜின் உடற்பயிற்சி கூடத்தில் உள்ளவர்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரித்து பேசுகையில், கஜா புயல் மற்றும் கொரோனா காலங்களில் வீட்டில் முடங்கியிருந்த பொதுமக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் உணவு பொருட்கள் வழங்கியதுபோல் அதேபோன்று புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் பொதுமக்களின் தேவைகளை என்னவென்று அறிந்து அதை பூர்த்தி செய்வேன் என்று குறிப்பிட்டார்.