logo
தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை 18004252735 என்ற  கட்டணமில்லா தொலைபேசியில் அளிக்கலாம்

தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை 18004252735 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அளிக்கலாம்

20/Mar/2021 08:52:38

புதுக்கோட்டை, மார்ச்:  தேர்தல் நடத்தை விதிகள் மீறல் மற்றும்  இதர தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்க 18004252735 எனும் கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும்  தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

 சட்டமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் 6.4.2021 அன்று நடைபெறுவதையொட்டி  முன்னிட்டு தோ;தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் முழுமையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிகள் மீறல் மற்றும்  இதர தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்க 18004252735 எனும் கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இதுதவிர தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக தனிநபரோ அல்லது அரசியல் கட்சி பிரமுகர்களோ செயல்பட்டால்,  பொதுமக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம்  புகார்களை cVIGIL என்ற செல்போன் செயலி வாயிலாக தெரிவிக்கலாம். 

மேற்காணும் cVIGILசெயலியில் பொதுமக்கள் தங்கள் புகார்களை புகைப்படம் வாயிலாக, ஆடியோ வாயிலாக மற்றும் வீடியோ வாயிலாகவும் மாவட்ட தேர்தல் அலுவலா; மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு cVIGIL செயலியில் தெரிவிக்கலாம். 

Top