logo
கரும்பு ஆலைகளுக்கான விவசாயப்பகுதிகளை பிரிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை

கரும்பு ஆலைகளுக்கான விவசாயப்பகுதிகளை பிரிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை

26/Sep/2020 06:34:40

இது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு இந்திய விவசாயிகள் சங்க  மாநில பொதுச்செயலர் புதுக்கோட்டை  ஜி.எஸ். தனபதி அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகள்,கடந்த ஓர் ஆண்டாக சொல்லொன்னா துயரத்தில் உள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வேண்டி பழைய ஈஐடி  பாரி சர்க்கரை ஆலை கரும்பு பகுதிகளை நமது மாவட்டத்தில் குருங்குளம் அறிஞர் அண்ணா ஆலைப்பகுதியான, கந்தர்வகோட்டை தாலுகா முழுவதும், கறம்பக்குடி தாலுகாவில், கறம்பக்குடி பிர்க்கா, புதுக்கோட்டை தாலுகாவில், வாராப்பூர் பிர்க்கா, தவிர, கரும்பு சாகுபடி பகுதிகளான  குளத்தூர் தாலுகா, இலுப்பூர், விராலிமலை, திருமயம், பொன்னமராவதி, ஆலங்குடி அறந்தாங்கி தாலுகா பகுதி விவசாயிகள் அனைவரின் அனைத்து தரப்பு விவசாயிகளின் ஒருமித்த கருத்தையும் விருப்பத்தையும் கையெழுத்துமூலம், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், அரசு செயலாளர்களுக்கு தெரிவித்தும், விவசாயிகளின் விருப்பத்துக் குமாறாக, குளத்தூர் தாலுகா, ஆலங்குடி தாலுகா முழுமையும், புதுக்கோட்டை பிர்கா, மழையூர் பிர்க்கா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கியிருப்பது விவசாயிகளின்  கோரிக்கைக்கு  பின்னடைவு மட்டுமல்ல, கரும்பு விவசாயத்தை கைவிட்டுவிட வேண்டிய நிலைக்கும், சாகுபடி செய்துள்ள கரும்புகளையும் அழித்துவிட வேண்டிய நிலைமைக்கும்  விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். யாரையோ திருப்தி செய்வதற்காக, அதிகாரிகள், தன்னிச்சையாக விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள் என்பதை இதுவரை எங்கள் கோரிக்கைக்கு ஆதரவளித்து வந்த தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவருவதுடன், தாங்கள், குளத்தூர், ஆலங்குடி, தாலுகாக்கள் முழுவதும், புதுக்கோட்டை தாலுகாவில் புதுக்கோட்டை பிர்கா, கறம்பக்குடி தாலுகாவில்,மழையூர் பிர்கா பகுதிகளை மட்டும், கோத்தாரி சர்க்கரை ஆலைக்கு. ஒதுக்கீடு செய்து, ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாக்களை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையுடன் இணைக்க உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.


Top