logo
சட்டமன்ற தேர்தல்:நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேதி மாற்றம்

சட்டமன்ற தேர்தல்:நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேதி மாற்றம்

11/Mar/2021 06:27:26

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம்  நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா சட்டமன்றத்தேர்தல்  காரணமாக தேதி மாற்றப்பட்டுள்ளது

 புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது நார்த்தாமலை அருள்மிகுமுத்து மாரியம் மன்  கோயிலாகும்.  இக்கோயிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா ஏப்ரல் 5- ஆம்தேதி நடைபெறுகிறது.. இந்நிலையில் ஏப்ரல் 6-ஆம்தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்த்திருவிழா தேதியை மாற்றி வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்  நடந்தது.


இக்கூட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற (தனி) தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், குளத்தூர்  வட்டாட்சியர்  பெரியநாயகி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கீழ்கண்டவாறு திருவிழா மாற்றி அமைபதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்ச் 21-ஆம் தேதி நடைபெறும் பூச்சொரிதல் விழா, மார்ச் 28--ஆம்தேதிக்கும், மார்ச் 28-ஆம்தேதி காப்புகட்டுதல் விழா ஏப்ரல் 4-ஆம் தேதிக்கும், ஏப்ரல் 4-ஆம் தேதியில் நடைபெறும் எட்டாம் திருவிழா ஏப்ரல் 11-ஆம் தேதிக்கும், ஏப்ரல் 5-ஆம் ஆம் தேதி நடைபெறும் ஒன்பதாம் திருவிழா ஏப்ரல் 12-ஆம் தேதிக்கும், ஏப்ரல் 6-ஆம்தேதி  நடைபெறும் பத்தாம் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதிக்கும், ஏப்ரல் 5-ஆம் தேதி நடக்க இருந்த தேரோட்டம் ஏப்ரல் 12-ஆம் தேதியும் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

இதில் காவல்துறை, வருவாய்த்துறை, கோவில் மண்டகாப்படிதாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமுக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

Top