logo
மாநில துப்பாக்கி சுடும் போட்டிகள்: தங்கம், வெள்ளி உள்பட 6 பதக்கங்களை வென்றார் நடிகர் அஜித்குமார்

மாநில துப்பாக்கி சுடும் போட்டிகள்: தங்கம், வெள்ளி உள்பட 6 பதக்கங்களை வென்றார் நடிகர் அஜித்குமார்

09/Mar/2021 07:13:17

சென்னை, மார்ச்: மாநில அளவிலான 46-ஆவது துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்பட 6 பதக்கங்களை வென்றார்.

சென்னை ரைபிள் கிளப் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 56 சங்கங்களின் உறுப்பினர்கள் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர்.

60 பிரிவுகளாக நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டிகளில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு  பின்வரும் பிரிவுகளில் தங்கம், வெள்ளி உள்பட 6 பதக்கங்களை வென்றார்.

Air Pistol 10mts (ISSF) Team - தங்கம்.Center Fire Pistol .32 (ISSF) 25mts Team - வெள்ளி. Center Fire Pistol .32 (NR) 25mts Team - தங்கம்.

Standard Pistol .22 (ISSF) 25mts Team - தங்கம்.Standard Pistol .22 (NR) 25mts Team - வெள்ளி.Free Pistol .22 (NR) 50mts Team - தங்கம். 

 வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட அனைவருக்கும்  சென்னை ரைபிள் கிளப் செயலர் ராஜசேகர்பாண்டியன், அகில இந்திய ரைபிள் கிளப் பொதுச்செயலர் டி.வி.எஸ். ராவ்,  தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க செயலர் ரவிகிருஷ்ணன், டிஜிபி தமிழ்செல்வன், சென்னை ரைபிள் கிளப் இணைச்செயலர் கோபிநாத் உள்ளிட்டோர் பதக்கங்களை வழங்கினர்.                                                   


Top