07/Mar/2021 08:26:20
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதனிடையே 14-ஆவது ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் மும்பை - பெங்களூரு அணிகள் களம் காண்கின்றன. ஆமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி திடலில் பிளே ஆப் போட்டிகளும், மே 30-இல் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.
மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் தலா 10 போட்டிகளும், ஆமதாபாத், தில்லியில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளன.ஐ.பி.எல். தொடரில் எந்த அணிகளுக்கும் தங்களது சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.