logo
டிஜிபி ராஜேஷ்தாஸை கைதுசெய்யக்கோரி  புதுக்கோட்டையில் மாதர்சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்

டிஜிபி ராஜேஷ்தாஸை கைதுசெய்யக்கோரி புதுக்கோட்டையில் மாதர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

06/Mar/2021 08:07:02

புதுக்கோட்டை, மார்ச்: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருகும் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸை கைது செய்யக்கோரி  புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்  சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சண்முகம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பேசினர்.


Top