logo
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் : செல்போனில்  cVIGIL  செயலி மூலம்  புகார் தெரிவிக்கலாம்: தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் : செல்போனில் cVIGIL செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்: தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

06/Mar/2021 06:04:12

புதுக்கோட்டை, மார்ச்:  தோ;தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை செல்போனில் cVIGIL செயலி மூலம் தெரிவிக்கலாம். 

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி,  தமிழக சட்டப்பேரவை  பொதுத் தேர்தல்  தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகள்  26.2.2021 பிற்பகலில் அமலுக்கு  வந்தது.  தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக தனிநபரோ அல்லது அரசியல் கட்சி பிரமுகர்களோ செயல்பட்டால்,  பொதுமக்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம்   தங்கள் புகார்களை cVIGIL  என்ற செல்போன் செயலி வாயிலாக தெரிவிக்கலாம். 

மேற்காணும் cVIGIL  செயலியில் புகார்களை  பொதுமக்கள்  பின் வரும்   மூன்று வழிகளில் தெரிவிக்கலாம். புகைப்படம் வாயிலாக, ஆடியோ வாயிலாக மற்றும் வீடியோ வாயிலாகவும் cVIGIL செயலியில் தெரிவிக்கலாம்.

cVIGIL செயலி பதிவிறக்கம் செய்யும் முறை: முதலில் தங்களது செல்போனில் play store App Open செய்யவும். இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட  cVIGIL   செயலியை   install  செய்யவும்.  install  செய்த cVIGIL  செயலியை   Open செய்து தங்களது செல்போனை  எண்ணை பதிவிடவும். பின்னர் செல்போனுக்கு வரும் நான்கு இலக்க  OTP   எண்ணை பதிவிடவும். இறுதியாக தங்களது புகார்களை மேற்கண்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு முறையில் பதிவுசெய்திடலாம். 

Top