logo
  சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை நடந்தால்  அதுகுறித்த தகவலை  வங்கிகல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்: தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரி தகவல்.

சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை நடந்தால் அதுகுறித்த தகவலை வங்கிகல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்: தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரி தகவல்.

03/Mar/2021 12:23:29

புதுக்கோட்டை, மார்ச்: சட்டப்பேரவை பொது தோ;தலை முன்னிட்டு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.

 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:   இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான  கால அட்டவனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்தல் பிரசாரத்தின்போது சமமான, ஆரோக்கியமான போட்டியிடும் சூழலை  அனைத்து வேட்பாளர்களுக்கிடையே உருவாக்கிடவும் பணம், பொருட்கள் மூலமாக வாக்காளர்களுக்கிடையே தேவையற்ற செல்வாக்கினை செலுத்துவதை தடுத்திடவும் பல்வேறு அறிவுரைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

      இதன்படி வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பரிவர்த்தனை நிகழும் போது அதுகுறித்த தகவல்களை வங்கியாளர்களிடமிருந்து பெற மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும்  தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 


ஒரு வங்கி கணக்கில் கடந்த இரண்டு மாதங்களாக பணப்பரிவர்த்தனை எதுவும் நடைபெறாத நிலையில் தோ;தல் அறிவிக்கப்பட்ட பின்னர்  திடீரென சந்தேகத்திற்கிடமான வகையில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கி கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்களை உடனடியாக வங்கியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

        இதே போன்று வேட்பாளர் அவரது மனைவி, அவரை சார்ந்தோர் வங்கி கணக்குகள் மற்றும் அரசியல் கட்சியினர் வங்கி கணக்கில்  ரூ.1 லட்சத்திற்கு  மேல் வரவு, பற்று செய்யப்பட்டாலும், மேலும் ஒரு வங்கி கணக்கிலிருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு RTGS மூலம் தோ;தல் காலத்தின் போது பணப்பரிவர்த்தனை நடைபெற்றாலும் அதுகுறித்த தகவல்களை வங்கியாளர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்    என்றார்  மாவட்ட ஆட்சியர்பி.உமாமகேஸ்வரி.

       இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.


Top