logo
அஞ்சல் அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவைக் கைவிடக் கோரிக்கை

அஞ்சல் அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவைக் கைவிடக் கோரிக்கை

26/Sep/2020 11:59:57

புதுக்கோட்டை: புதுக்கோட்டை  புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அஞ்சல் நிலையத்தை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டுமென இப்பகுதி மக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் சராசரியாக 10 ஆயிரம்பேர் வந்து செல்கின்றனர். மேலும் அருகில் அமைந்துள்ள இரண்டு முக்கிய அரசு கல்வி நிறுவனங்கள், ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் கல்லூரி பயிலும் மாணவிகள் குறைந்தபட்சம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவிகளில்  பெரும்பாலோர் கிராமப்புறங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள்.

 இவர்கள் தங்களது தேவைகளுக்காக தொலைவில் இருக்கக்கூடிய தலைமை அஞ்சல்நிலையத்திற்கோ அல்லது பொது அலுவலக வளாகத்தில் உள்ள அஞ்சலகத்திற்கோ செல்லமுடியாது. அவர்கள் வீண் அலைச்சலின்றி எளிதாக  இந்த அஞ்சலகம் தான் பெரிதும் பயன்பட்டு வருகிறது. அத்துடன். பேருந்து நிலைய வியாபாரிகளுக்கும் மிகவும் உபயோகமாக இருந்து வருவதும் இந்த அஞ்சலகம் தான். புதிதாக ஒரு அலுவலகத்தை உருவாக்குவது எளிது. இருப்பதை இடமாற்றம் செய்தால் மீண்டும் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆகவே பொதுமக்கள், வியாபாரிகள், மாணவிகள் நலனைக்  கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலைய அஞ்சலகம் தொடர்ந்து அங்கேயே செயல்பட அஞ்சல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாணவர்களும், பொதுமக்களும் சமுக ஆர்வலர்களும்,வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Top