logo
எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் இழப்பு இந்தியாவின் இழப்பு- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் இழப்பு இந்தியாவின் இழப்பு- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

26/Sep/2020 11:39:07

news by raj,erode.. ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலிங்கியம், மொடச்சூர் கோட்டுபுள்ளம்பாளையம் அளுக்குளி உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கான்கிரீட் சாலைகளுக்கான பூமி பூஜை மற்றும் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி திறப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார். இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் இழப்பு இந்தியாக்கு  ஏற்பட்ட இழப்பாகும். 14 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்கள் பாடியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காவும் பாடல் பாடியவர். இசையுலகில் என்றும் நிலைத்திருப்பார்  எனக்குறிப்பிட்டார்.

கோபி அருகே கலிங்கியம் ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைப்பதாற்கான பணியை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் ஜெயராமன், அதிமுக நிர்வாகிகள் காளியப்பன், மௌலீஸ்வரன், அனுராதா, ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top