logo
புதுக்கோட்டை  திருவப்பூர் முத்துமாரியம்மனுக்கு விடியவிடிய நடைபெற்ற பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மனுக்கு விடியவிடிய நடைபெற்ற பூச்சொரிதல் விழா

22/Feb/2021 10:54:41

புதுக்கோட்டை, பிப்:  புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்  விடிய விடிய பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

 புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தஆயிரக்கணக்கான பக்தர்கள்  விரதம் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.  திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும்,  கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து  ஞாயிற்றுக்கிழமை இரவு  7 மணி முதல் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதம் , சப்பரத்தில் மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் பூக்களை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சார்த்தி  சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

விடிய விடிய இந்த பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து  திங்கள்கிழமை காலையில்  பூக்களால் வேயப்பட்டிருந்த  முத்துமாரியம்மனுக்கு  பூப்பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Top