logo
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் எஸ்டிபிஐ கட்சி- தன்னார்வ குழுவினர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் எஸ்டிபிஐ கட்சி- தன்னார்வ குழுவினர்

25/Sep/2020 05:15:43

ஈரோடு:கொரோனா வைரஸ் இன்று உலக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவில் ஊடுருவி தற்போது தமிழகத்தில் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் வீரியம் அதிகமாக இருப்பதன் காரணமாக தினமும் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த பந்தம் பார்க்க முடியாத தொட முடியாத நிலை உள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் வைரஸ் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதைப்போல் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ்  தொற்றால் இறந்தவர்களின் உடலை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களை கண்ணியமான முறையில் அவர்களது மத நம்பிக்கைப்படி எஸ்டிபிஐ கட்சி மற் றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தன்னார்வலர்கள் குழுவினர் அடக்கம் செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தன்னார்வலர்கள் குழுவினர் வைரசால்  இறந்தவர்களை அவர்களது மத நம்பிக்கை படி கண்ணியமான முறையில் அடக்கம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வருகின்றனர் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட முடியாத நிலை இருந்து வருகிறது இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் எங்களுடைய கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை கொண்ட குழுவை அமைத்து அதன் பின்னர் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம்.ஈரோட்டில் இதுவரை வைரஸால் உயிரிழந்த 12 பேரின் உடல்களை அவர்களின் மத நம்பிக்கைப்படி கண்ணியமான முறையில் அடக்கம் செய்து உள்ளோம். இதற்காக நாங்கள் எந்த பணமும் பெறாமல் சாதி மதம் பார்க்காமல் மனிதநேயத்தோடு அவர்களது மத நம்பிக்கைப்படி அடக்கம் செய்து வருகிறோம். எங்களது சேவை தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள்  கூறினர்.




Top