logo
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்  திட்டத்தை தொடங்கி வைக்க  வருகை தரும் முதல்வரை வரவேற்க சிறப்பான ஏற்பாடு: அமைச்சர் விஜயபாஸ்கர்  தகவல்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வரை வரவேற்க சிறப்பான ஏற்பாடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

20/Feb/2021 07:15:34

புதுக்கோட்டை, பிப்:   புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூரில் (பிப்.21) இன்று நடைபெறும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்  திட்ட தொடக்க  விழாவிற்கு வருகை தரும்  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை  சிறப்பான முறையில் வரவேற்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குன்னத்தூரில்  முதல்வர்  கலந்துகொள்ளும் உள்ள விழா தொடர்பான  பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது: விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவுத் திட்டம் காவிhp-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டமாகும்.

காவிரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வந்து விவசாயத்தை செழிக்க செய்து வளமான மாவட்டமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என  முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இதேபோன்று இத்திட்டத்தின் நிலம் கையகப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட முதற்கட்ட பணிகளுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அவா;களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் சார்பில் பாராட்டு விழா நடத்தி நன்றி தொpவிக்கப்பட்டது. 

இத்திட்டம் முதற்கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ நீளத்துக்கு தற்பொழுது செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் 47 2 கி.மீட்டரும், திருச்சி மாவட்டத்தில் 18.8 கி.மீட்டரும், புதுக்கோட்டை மாவட்டத்தில்  52.3  கி.மீட்டரிலும்  செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மொத்த மதிப்பீடு தொகை ரூ.6,941 கோடி ஆகும். 

இதன்படி கரூர் மாவட்டத்தில் 4.10 கி.மீ வரை ரூ.171 கோடி மதிப்பீட்டிலும், திருச்சி மாவட்டத்தில் 1.83 கி.மீ நீளமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.52 கி.மீ நீளமும் என மொத்தம் 5.35  கி.மீ நீளத்திற்கு ரூ.160 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. 

அதனடிப்படையில் இத்திட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில் இன்று (21.02.2021) அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.  விழாமேடை, பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிக்கல்நாட்டும் இடம், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அமரும் இடம், வாகனம் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு ள்ளது. 

தலைமுறைகள் பயன்பெறும் வரலாற்று சிறப்புமிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப் புத் திட்டத்தால் விவசாயிகளின் நீண்டநாள் கனவு நிறைவேற உள்ளது. விவசாயிகளின் பாதுகாவலராக விளங்கும்  தமிழக முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இந்த ஆய்வின் போது,  மத்திய மண்டல திருச்சி சரக காவல்துறை தலைவர் எச்.எம். ஜெய ராம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல்.பாலாஜி சரவணன், நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்லம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 


Top