logo
சிமெண்ட், ஸ்டீல் விலை உயர்வைக்கண்டித்து அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் அகில இந்திய பொறியியல் கட்டுனர் ஒப்பந்தக்காரர்கள் போராட்டம்

சிமெண்ட், ஸ்டீல் விலை உயர்வைக்கண்டித்து அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் அகில இந்திய பொறியியல் கட்டுனர் ஒப்பந்தக்காரர்கள் போராட்டம்

12/Feb/2021 06:52:45

புதுக்கோட்டை, பிப்: சிமெண்ட், இரும்புக்கம்பி ஆகியவற்றின் அசாதாரண விலை உயர்வைக் கண்டித்து அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் அகில இந்திய பொறியியல் கட்டுனர் ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தினர் புதுக்கோட்டையில் (பிப்.12) வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம், மற்றும் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.


கோரிக்கைகள்: கட்டுமானத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் கட்டுமாளப் பொருட்களில் சிமெண்ட்டும், இரும்புக்கம்பி மிக முக்கியமானவையாகும். கட்டுமானத்துறையை தவிர்த்த வேறு எந்த ஒரு பெரிய நுகர்வோரும் இல்லாத கட்டுமானப் பொருள் சிமெண்ட் மட்டுமே ஆகும். பெரும் கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் குறித்த காலக்கெடுவிற்குள் ஒப்பந்த தொகைக்கு உள்ளேயே பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அவர்களுக்கு இது பெரும் சுமையாகும்.

இந்நிலையில் கட்டுநர் வல்லுநர் சங்கம் தனது போராட்டத்தினை தொடரும் முகமாக இந்திய போட்டிகள் ஆணையம் (CCI) முன்பாக ஒரு மனுவிளை தாக்கல் செய்தது சிமெண்ட் உற்பத்தியாளர்களும், உற்பத்தியாளர்களின் சங்கமும் தங்களுக்காக இவ்வழக்கில் பிரபலமான வழக்கறிஞர்களை கொண்டு வாதாட செய்தனர். இருப்பினும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஆணையம் ரூ.6307 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.

 இது சிமெண்ட உற்பத்தியாளர்கள் நேர்மையற்ற முறையில் வர்த்தகம் செய்து சம்பாதித்த லாபத்தில் கிட்டத்தட்ட 50 சதவிகிதமாகும் இதன் பிறகும் கூட சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையினை குறைப்பதற்கு பதிலாக விலையை மேலும் உயர்த்தினர். இது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் சட்ட நடைமுறைகளை கேலிக்கூத்தாக்கியது. மூலப்பொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இவ்லாத நிலையில் ஸ்டில் உற்பத்தியாளர்களும் விலையை உயர்த்தினர்.

 இத்தகையை அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு  சிமெண்ட் மற்றும் எஃகு உற்பத்தியாளர்களின் நியாயமற்ற வர்த்தக போக்கினை கட்டுப்படுத்துவதற்காக சிமெண்ட் மற்றும் எஃகு ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும். எஃகு கம்பிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த அதன் ஏற்றுமதிக்கு உடனடியாக முழுத்தடையை அமல்படுத்த வேண்டும். இரும்புத் தாது மற்றும் எஃகு கிராப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

சிமெண்ட் மற்றும் ஸ்டீல் உற்பத்திக்கான உள்ளீட்டு மூலதனப் பொருட்களில் எவ்வித விலை உயர்வோ கட்டுமானத் துறையினரிடமிருந்து அசாதாரணமான தேவையோ அதிகரிக்காத நிலையிலும் உற்பத்தியாளர்களின் தார்மீக நெறி முறைகளுக்கு மாறான நடைமுறைகளால் ஏற்பட்டுள்ள அசாதாராணமான விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவினை ஏற்படுத்துமாறு அரசினை அகில இந்திய கட்டுநர் சங்கம் கோருகிறது

அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் சிமெண்ட், ஸ்டீல், மற்றும் பிற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12.02.2021  ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற  போராட்டத்துக்கு, அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்க மாவட்ட மையத்தலைவர் என். ராமதாஸ் தலைமை வகித்தார். போராட்டத்தை அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் ராய. முத்துக்குமார் தொடங்கி வைத்து பேசுகையில்,

 அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் 1941-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு அகில இந்திய அளவில் 200 மய்யங்களையும் ஒரு லட்சம் உறுப்பினர்களையும் 20000-க்கும் அதிகமான தொழில் மற்றும் தொழில் வணிகர்களை உள்ளடக்கிய அமைப்பாகும் கட்டுமானத்துறையில் வரும் தொழில் ரீதியான சிரமங்களையும், கொள்கை ரீதியான சிரமங்களையும் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதோடு ஒட்டுமொத்த கட்டுநர் சமுதாயத்தையும் உயர்த்துவதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டு கட்டுநர் வல்லுநர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

 சிமெண்ட் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மிகப் பெரும் பங்களிப்பு செய்யும் கட்டுமானத்துறை மிக முக்கியமான பொருளாதார செயல்பாடுகளை உடையதாகும் மொத்த திட்டச் செலவினத்தில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பு செய்யும் கட்டுமானத்துறை தன்னோடு தொடர்புடைய 400-க்கும் மேற்பட்ட தொழில்கள் வளர்வதற்கு உதவுவதோடு 60 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு அவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்துக் கொண்டிருக்கிறது

இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் விரைவான மற்றும் உடனடி நடவடிக்கையானது குமார் 60 மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் மலிவு விலை வீட்டுத் திட்டத்தையும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளடக்கிய கட்டுமானத் துறையினை சரிவில் இருந்து காப்பாற்றும் மேலும் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்படும் வரை மத்திய மாநில அரசுகள் தலையிட்டு சிமண்ட், ஸ்டீல் மற்றும் ஏனைய பிற கட்டுமானப் பொருட்களின் விலைகளை குறைத்து நிர்ணயித்து பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

தொடர்ந்து,  கட்டிடப் பொறியாளர் சங்க நிர்வாகிகள் கனகராஜ், கருணாநிதி உள்ளிட்டோர் பேசினர்.இந்திய கட்டுநர் வல்லுனர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர்கள் ரமேஷ், முருகேசன், ஷாஜகான், அருள்சாமி, துணைத்தலைவர்கள் இளங்கோ, அரவிந்த், தர்மலிங்கம், துணைச்செயலர்கள் எஸ்.பி. கார்த்திகேயன்,   செயலர் அண்ணாமலை, பொருளர் தாமரைச்செல்வன் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.




Top