logo
வாகன அழிப்பு திட்டம்.. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்குமா...?

வாகன அழிப்பு திட்டம்.. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்குமா...?

10/Feb/2021 07:41:51

 2021 - 22 பட்ஜெட் தாக்கல் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் சொன்ன அறவிப்புகளில் முக்கியமான ஒன்று வாகன அழிப்பு திட்டம். இது பல வருடங்களாக ஆட்டோமொபைல் துறையினரால் கோரிக்கையாக வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டில் அறிவிப்பும் வந்துள்ளது. இது ஒரு தரப்பில் மிகுந்த வரவேற்பினை பெற்றாலும், மறுதரப்பில் பெரிய அளவிலான வர்த்தக வாகன உரிமையாளர்களுக்கு சற்று கலக்கத்தையும் உருவாக்கியுள்ளது. 


  

மக்களுக்கு பாதிப்பு ஏனெனில் இது அவர்களை நேரடியாக பாதிக்கும். ஏனெனில் பல லட்சம் கொடுத்து வாங்கும் வர்த்தக வாகனத்தினை, 15 வருடங்களுக்கு பிறகு பயன்படுத்த முடியாது என்பது ஏமாற்றமாக இருக்கலாம். அதோடு இந்த வாகன அழிப்பு திட்டத்தின் காரணமாக புதிய வாகனங்களின் விலை அதிகரிக்கும். இதனால் வாகன உரிமையாளர்கள் இந்த செலவினங்களை வாடகையிலேயே அதிகப்படுத்துவர். இதனால் பொருட்கள் ஏற்றிச் செல்லும் உரிமையாளர்கள் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். தேவை அதிகரிக்கும் இதனால் இது பொருட்களின் விலையை அதிகரிக்க தூண்டும். அதோடு தற்போது அதிகரித்து வரும் எரிபொருள் விலையும் இன்னும் கட்டணத்தினை அதிகரிக்க தூண்டும். இதனால் கட்டணங்கள் அதிகரிக்ககூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. 





எனினும் இந்த வாகன அழிப்பு திட்டத்தால்புதிய வாகனங்களுக்கு தேவை அதிகரிக்கும். இதனால் வாகன உற்பத்தி அதிகரிக்க வழிவகுக்கும். வேலைவாய்ப்பு பெருகும் இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வாகன அழிப்பு திட்டம் 25 லட்சம் பேருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த பயன்படும் என்று கூறியுள்ளார்.  அதோடு இது வாகன உதிரி பாகங்களின் விலையை 40 சதவீதம் வரை குறைக்க உதவும் என்றும் கூறியுள்ளார்.   செலவுகள் குறையும் அதோடு இந்த திட்டத்தினால் இந்தியா இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாறும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார். 



அதோடு 15 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்கள் அதிக பராமரிப்பு செலவுகளை கொண்டிருக்கும். எரிபொருள் அதிகம் தேவைப்படும். ஆக இந்த ஸ்கிராப்பிங் பாலிசி சிக்கல்களை சமாளிக்க உதவும் என்றும் கூறியுள்ளார். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் அதோடு எம்எம்எம்இ அமைச்சகத்தால், மகாத்மா காந்தி கிராமப்புற தொழில்மயமாக்கல் நிறுவனத்தின் மூலம், கிராம்ப்புறங்களில் தொழில் பயிற்சி அளிக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் . உண்மையில் இது கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.


Top