logo
ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும்.. முடியவில்லை என்றால் மரங்களை வெட்ட வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்

ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும்.. முடியவில்லை என்றால் மரங்களை வெட்ட வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்

25/Sep/2020 11:05:51

சாலை விரிவாக்கத்திற்கு ஒரு மரம் வெட்டினால் 10 மரங்களை நட்டு பராமரிக்க முடியவில்லை என்றால் மரங்களை வெட்ட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


குமரி முதல் வாரணாசி வரையிலான சாலை விரிவாக்கத்தின் போது சுமார் ஒரு லட்சத்து 78ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், புதிதாக மரங்களை நட நெடுஞ்சாலைத்துறை தவறிவிட்டதாக மனுதாரர் புகார் கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இதே நிலை தொடர்ந்து நீடித்தால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாகும் என்ற நீதிபதிகள், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.    

Top