logo
மத்திய அரசை கண்டித்து செப்.28-இல் ஆர்ப்பாட்டம்- ஈரோட்டில் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

மத்திய அரசை கண்டித்து செப்.28-இல் ஆர்ப்பாட்டம்- ஈரோட்டில் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

25/Sep/2020 08:30:19

மத்திய அரசை கண்டித்து செப்.28-இல் ஆர்ப்பாட்டம்- ஈரோட்டில் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்க செய்யும் மூன்று  வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசு, அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 28-இல்  தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது

 குறித்து  ஈரோடு தெற்கு மாவட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  ஈரோடு திமுக அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி, காங் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்துசாமி பேசியதாவது: ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும். கொரோனா காலம் என்பதால் நண்பர்களை வரவழைத்து ஆபத்தில் தள்ளி விட கூடாது. 100 பேருக்கு மேல் கூட்டத்தை சேர்க்க கூடாது.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர் பயன்படுத்த பச்சை துண்டு, பச்சை நிற முக கவசம் தயார் நிலையில் திமுக. அலுவலகத்தில் உள்ளது. போக்குவரத்துக்கு, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.


Top