logo
ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 125 வழக்குகள் பதிவு போலீசார் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 125 வழக்குகள் பதிவு போலீசார் நடவடிக்கை

22/Apr/2021 06:55:09

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில்  இரவு நேர ஊரடங்கை மீறியதாக 125 வழக்குகள் பதிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.

அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும்,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தது. எனினும் மருத்துவம், அவசர தேவைக்கு வழக்கம்போல் வாகனங்கள் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இரவு நேர ஊரடங்கு நேற்று முன்தினம்(ஏப்.20) இரவு முதல் அமலுக்கு வந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மதிக்காமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர்  தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரண்டு மாநில எல்லை சோதனை சாவடிகளிலும், 24 வட்ட சோதனைச் சாவடிகளிலும் கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரம் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரவு நேர ஊரடங்கு மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டம் முழுவதும் 500 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்

ஈரோடு மாநகர் பகுதியான பன்னீர்செல்வம் பார்க்க, காளைமாட்டு சிலை, பேருந்து நிலையம். வீரப்பன்சத்திரம் கருங்கல் பாளையம், இதேபோல் கோவில் பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் இரவு . இரவு 10 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றியதுஇரவு 10 மணிக்கு மேல் கடையைத் திறந்து வைத்ததுகாரில் ஊர் சுற்றியவர்கள்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றியது, கடைகளைத் திறந்து வைத்திருந்தது என முதல் நாளில் 50 வழக்கு பதிவு செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு மீறியதாக மாவட்டம் முழுவதும் போலீஸார் 75 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.கடந்த 2 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு மீறியதாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார்  எச்சரித்துள்ளனர்.

Top