logo
ஈரோட்டில் ரூ.8.61 லட்சத்தில்  246 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள்: எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

ஈரோட்டில் ரூ.8.61 லட்சத்தில் 246 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள்: எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

06/Feb/2021 11:05:05

ஈரோடு, பிப்: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட சி.எஸ்.ஐ. ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 246 மாணவ மாணவிகளுக்கு ரூ 8.60 லட்சம் மதிப்பில் தமிழக அரசின்  விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் விழா  நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம்,  கே.எஸ்.தென்னரசு ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை  வகித்து  மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே சி பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ், கோவிந்தராஜன், முருக சேகர், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, அரசு வழக்குரைஞர்கள் துரைசக்திவேல், சூரம்பட்டி தங்கவேலு, காசிபாளையம் இளைஞர் அணி செயலாளர் கேபிள் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பெரியார் நகர் பகுதியில் அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும்  வகையில் புள்ளி விவரங்களுடன்  துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம்,  கே.எஸ்.தென்னரசு ஆகியோர் பொதுமக்களிடம் வினியோகித்தனர்.

Top