logo
பயிற்சியளித்தால் எந்த நவீன தகவல் தொழில் நுட்பமும் விவசாயிகளுக்கு எளிதில் கைகூடும்

பயிற்சியளித்தால் எந்த நவீன தகவல் தொழில் நுட்பமும் விவசாயிகளுக்கு எளிதில் கைகூடும்

24/Sep/2020 06:07:18

முறையாகப் பயிற்சியளித்தால் போதும்  கடைக்கோடி கிராமங்களில் உள்ள விவசாயிகள் கூட  எந்நவிதமான நவீன தகவல் தொழில் நுட்பத்தை  எளிதாகப்  பயன்படுத்துவார்கள் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர; ஆர;.ராஜ்குமார்

புதுக்கோட்டை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கூட்ட அரங்கில் நடைபெற்ற  விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்ததுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:  எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்துறை மற்றும் வேளாண்மை கல்லூரிகளுடன் இணைந்து 53 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. ஆரம்பத்தில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்த தயங்கிய விவசாயிகள் ஓரிரு நிகழ்ச்சிக்கு பிறகு அதை எளிதாக நன்கு பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கிணைப்பாளர்கள்; விவசாயிகளுக்கு காணொளிகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க பயிற்சி அளித்தனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 100 விவசாயிகள் இணையவழி நிகழ்ச்சிகளில் தாங்களாகவே இணைய பயிற்சி பெற்றுள்ளார;கள் என்பது பெருமைக்குறியது. விவசாயிகள் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்த தயங்குவார;கள் என்பதை பொய்யாக்கி, பயிற்சியளித்தால் கடைக்கோடி கிராமங்களில் உள்ள விவசாயிகள் கூட தகவல் தொழில் நுட்பத்தை ஆர்வமாக பயன்படுத்துவார்கள் என்ற  அனுபவம் கிடைத்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நடத்தப்பட்ட இணைய வழி நிகழ்ச்சிகள் எவ்வாறு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது, என்னென்ன மாற்றங்கள் தேவையாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்த கருத்துக் கேட்பு நிகழ்ச்சி  நடைபெறுகிறது என்றார் ராஜ்குமார்.

முன்னதாக நிகழ்ச்சியை  தொடக்கி வைத்து  நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ்.ஜெயஸ்ரீ பேசுகையில்,  எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயத்தில் ஏற்படுகின்ற அறிவியல் வளர்ச்சிகளை ஆராய்ச்சி கூடங்களில் இருந்து விவசாயிகளுக்கு கொண்டு செல்வதிலும், விவசாயத்தில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்து பயன்படுத்துவதிலும் முன்னோடியாகத் திகழ்கிறது என்றார். நிகழ்ச்சியில், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லெ.பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர்  மா.வீரமுத்து ஆகியோர் பேசினர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 

விவசாயிகள் பகிர்ந்த கருத்துகளில் சில...

கொரோனா ஊரடங்கு காலத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளின் உற்ற நண்பனாக பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை தகவல் தொழில் நுட்ப உதவியினர; நடத்தியது விவசாயிகளுக்கு விளைபொருட்களை விற்பனை செய்யவும், பயிர்களில் பூச்சி நோய்கள் தாக்குவதை கட்டுப்படுத்தவும், பயிர்க்காப்பீடு மற்றும் பிற அரசு திட்டங்களை அறிந்துகொள்ள உதவியாக இருந்தது என்றும் கூறினர். முன்னதாக கள ஒருங்கிணைப்பாளர் டி.விமலா வரவேற்றார். நிறைவாக கேஸ்.பிரிட்டோ நன்றி கூறினார்.     

 


Top